சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்: வெளியான ஷாக் ரிப்போர்ட்!

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்: வெளியான ஷாக் ரிப்போர்ட்!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று  பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த செய்தி அந்த நட்டு மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டான் வெளியிட்ட செய்தி குறிப்பில், சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் பரவல் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தலைநகர் நன்ஜிங்கில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று  பரவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாகாண அரசு, பெருந்திரளாகப் பரிசோதனைகளை நடத்தி வருகிறது.சமீபத்தில் இப்பகுதியில் 90 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது என்றும் கொரோனா தொற்று  பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து இந்த மாகாணத்தில் ரயில் மற்றும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை ஓயாத நிலையில் டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கொரோனா  வைரஸ் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்