உலகம்
ஜூஸ் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 52 பேர் பலி..!
வங்கதேசத்தில் ஜூஸ் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 52 பேர் உயிரிழந்த பரிதாபம்..!
வங்கதேசத்தில் ஜூஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழப்பு
வங்கதேசத்தில் ஜூஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்
வங்கதேசத்தில் உணவு பதப்படுத்தப்படும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகிலுள்ள நாராயண்கஞ்ச் மாவட்டத்தில் 6 மாடி கட்டிடத்தில் ஜூஸ் தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது. அந்த தொழிற்சாலையில் திடீரென நேரிட்ட பயங்கர தீவிபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தில் இருந்து தப்பிக்க அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்த சுமார் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தீ விபத்தில் பலரும் சிக்கிக் கொண்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். புகை மூட்டம் காரணமாக மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.