பானி பூரியின் தீவிர ரசிகையான பெண் ஒருவருக்கு அவருடைய திருமண நாளில், பானி பூரியால் செய்யப்பட்ட கிரீடத்தை தலையில் அணிந்து மகிழ்ந்த வீடியோ
பானி பூரியின் தீவிர ரசிகையான பெண் ஒருவருக்கு அவருடைய திருமண நாளில், பானி பூரியால் செய்யப்பட்ட கிரீடத்தை தலையில் அணிந்து மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சாலையோர கடைகளில் மிகப் பிரபலமானது உணவு பானி பூரி ஆகும்.சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் விரும்பி உண்பார்கள்.
பிரியாணி ரசிகர்களை போல பானி பூரிக்கும் மிகப் பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட பானி பூரி ரசிகை ஒருவர், அந்த உணவின் மீதுள்ள தன் காதலை வெளிப்படுத்த விரும்பினார். இதற்காக அவருக்கு பானி பூரியால் செய்யப்பட்ட கிரீடத்தை அணிவித்து உறவினர்கள் மகிழ்ச்சி அடையச் செய்தனர்.பானி பூரிகள் நிரப்பப்பட்ட தட்டின் முன் அமர்ந்துள்ள அவரது தலையில், உறவினர் ஒருவர் கிரீடத்தை அணிவிக்கிறார்.
ஆர்த்தி பாலாஜி என்ற அழகுக்கலை நிபுணர் அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ நிறைய பானிபூரி பிரியர்களின் லைக்குகளை பெற்று வருகிறது. இந்த வினோத நிகழ்வுக்கு பானி பூரி ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.அந்த பெண் குறித்து வேறு எந்த தகவல்களும் அந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை.