போப் பிரான்சிஸ்க்கு பெருங்குடலில் பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி..!
கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸூக்கு பெருங்குடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மதத் தலைவரான 84 வயதான போப் பிரான்சிஸ் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு பெருங்குடலில் பிரச்னை இருந்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸூக்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தத் தகவலை வாடிகன் செய்தித் தொடர்பாளர் மட்டீயோ புரூனி தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அதற்கான அறுவை சிகிச்சை ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன்பாக செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் தோன்றிய போப், பொதுமக்களுக்கு தனது ஆசிகளை வழங்கினார்.