அமேசான் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகினார் பெசோஸ்

அமேசான் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகினார் ஜெஃப் பெசோஸ்..!
அமேசான் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகினார் பெசோஸ்

அமேசான் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து ஜெஃப் பெசோஸ் விலகினார்.

உலகின் மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ஜெஃப் பெசோஸ் இன்று விலகினார். அதாவது, 27 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் நிறுவனத்தை தொடங்கிய அதே நாளில் ஜெஃப் பெசோஸ் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார்.
1994ஆம் ஆண்டு மிகவும் எளிமையான முறையில் தொடங்கப்பட்ட அமேசான் நிறுவனம், தற்போது மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், பிரபலமான நிறுவனமாகவும் திகழ்ந்துள்ளது. உலகின் பெரும் கோடீஸ்வரராக உயர்ந்த ஜெஃப் பெசோஸின் நிகர சொத்து மதிப்பு 20,000 கோடி டாலர் ஆகும்.  
இணையதளம் மூலம் 1994ஆம் ஆண்டு புத்தக விற்பனையை தொடங்கிய ஜெஃப் பெசோஸ், தற்போது தொலைக்காட்சி, கணினி போன்ற பொருட்களையும் இணையதளத்தில் விற்பனை செய்யும் நிறுவனமாக அமேசானை உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில், அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து ஜெஃப் பெசோஸ் விலகியுள்ளார். தனது ராக்கெட் தயாரிக்கும் நிறுவனமான ப்ளூ ஒரிஜன் நிறுவனத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
ஜெஃப் பெசோஸ், பதவி விலகியதை அடுத்து அமேசான் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஆண்டி ஜெஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com