படுக்கை அறையில் படுத்திருந்த பேய்!.... வாடகை வீடு தேடி அழைந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..

படுக்கை அறையில் படுத்திருந்த பேய்!.... வாடகை வீடு தேடி அழைந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..

அமெரிக்காவில் வாடகைக்கு வீடு தேடியபோது வீட்டின் படுக்கை அறையில் பேய் படுத்திருந்ததாக பெண் ஒருவர் இணையத்தில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுதல் காரணமாக தற்போது பல சேவைகள் ஆன்லைன் வழியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் வீடு வாடகைக்கு தேவைப்பட்டால், குறிப்பிட்ட வீட்டை விர்ச்சுவல் டூர் (Virtual Tour) மூலம் பார்வையிட்டு, பிடித்திருந்தால் குடியேறும் வசதி உள்ளது. 

இந்நிலையில், அப்படி வாடகைக்கு வீடு தேடிய பெண்ணுக்கு நேர்ந்த எதிர்பாராத அனுபவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாரா வாண்டர்பில்ட் (Sarah Vanderbilt) என்ற பெண், StreetEasy என்ற இணையத்தில்  வழியாக வாடகைக்கு வீடு தேடியுள்ளார். அப்போது விர்ச்சுவல் டூர் மூலம் வீடு ஒன்றை பார்வையிட்டுள்ளார். மிகவும் ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த வீட்டின் ஒவ்வொரு அறையையும் பார்த்துக் கொண்டே, படுக்கை அறைக்கு சென்றுள்ளார். அப்போது பெண் ஒருவர் படுக்கையில் படுத்திருப்பதை சாரா வாண்டர்பில்ட் பார்த்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக அந்த உருவம் மறைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சாரா வாண்டர்பில்ட், இதுகுறித்து தனது டிக்டாக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ”வாடகைக்கு வீடு ஒன்றை தேடிக் கொண்டிருந்தேன். StreetEasy இணையதளம் வழியாக 3டி இமேஜில் வீட்டை பார்வையிட்டேன். பார்ப்பதற்கு மிகவும் ஆடம்பரமாக இருந்தது. படுக்கை அறையை பார்க்கச் சென்றபோது திடீரென ஒரு பெண்ணின் உருவம் தெரிந்தது. அடுத்த சில நொடிகளில் அந்த உருவம் காணாமல் போனதால் பயந்துவிட்டேன்” என சாரா வாண்டர்பில்ட் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்