கணவரை கொலை செய்து அவருடைய ஆணுறுப்பை வெட்டி சமைத்த மனைவி!

கணவரை கொலை செய்து அவருடைய ஆணுறுப்பை வெட்டி சமைத்த மனைவி!
பிரேசிலை சேர்ந்த  பெண்  ஒருவர் தன் கணவனுடன் சண்டை போட்ட பிறகு, அவரது ஆணுறுப்பை வெட்டி சமைத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேசிலில் உள்ள 33 வயதுடைய பெண்மணி தான் கிறிஸ்டினா. இவர் தனது கணவர் ஆண்ட்ரேவுடன் கடந்த 10 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

இந்நிலையில் இவர்களுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால், அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பதாக பிரிந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.அதன்பின் மீண்டும் அவர்கள் ஒன்றாக வாழ தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அந்தப் பெண்மணி தனது கணவரை கொலை செய்துள்ளார். அதன் பின்பு அவரது ஆணுறுப்பை அறுத்து சமைத்ததாக இவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டது.கொலை சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்ததாக கூறப்பட கூடிய நபரின் உடலை பார்த்த பொழுது நிர்வாணமாகவும் சிதைந்த நிலையிலும் இருப்பதை கண்டுள்ளனர்.

 இதையடுத்து அவரின் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு இருப்பதையும் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அதன் பின்னர்,கணவரை கொலை செய்த வழக்கில் அந்த பெண்ணை கைது செய்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்