சீனாவில் 41 வயதான ஒருவருக்கு H10N3 பறவைக்காய்ச்சல் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜென்ஜியாங் நகரில் 41 வயதான நபர் ஒருவர் ஏப்ரல் 23-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 28-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மே 28-ம் தேதியன்று அவருக்கு H10N3 பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டது. அவர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை. அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்தனர். சிகிச்சைக்குப்பின் குணமடைந்த அந்த நபர் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். இவருக்கு ஏற்பட்டுள்ள வைரஸின் மரபணு தரவை பகுப்பாய்வு செய்து பழைய வைரஸ்களை ஒத்திருக்கிறதா அல்லது வெவ்வேறு வைரஸ்களின் புதுமையான கலவையா என்பதை கண்டறிய வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2016-ம் ஆண்டிலிருந்து 2017 வரை H7N9 பறவைக்காய்ச்சல் காரணமாக 300 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.