ஒடிசா மருத்துவமனையில் கழிப்பறையின் அருகே அரை நிர்வாணமாக படுத்திருக்கும் கொரோனா நோயாளி...!

ஒடிசா மருத்துவமனையில் கழிப்பறையின் அருகே அரை நிர்வாணமாக படுத்திருக்கும் கொரோனா நோயாளி...!
ஒடிசா மருத்துவமனையில் கழிப்பறையின் அருகே அரை நிர்வாணமாக படுத்திருக்கும் கொரோனா நோயாளி...!

ஒடிசா மருத்துவமனையில் கழிப்பறையின் அருகே கொரோனா நோயாளி ஒருவர் நிர்வாணமாக படுத்திருக்கும் சம்பவம் சக மனிதர்களின் நெஞ்சங்களை உலுக்கும் விதமாக அமைந்துள்ளது.

ஒடிசா மருத்துவமனையில் கழிப்பறையின் அருகே  கொரோனா நோயாளி ஒருவர் நிர்வாணமாக படுத்திருக்கும் சம்பவம் சக மனிதர்களின் நெஞ்சங்களை உலுக்கும் விதமாக அமைந்துள்ளது.

கொரோனா வின் இரண்டாவது அலை நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில் மக்கள் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமலும்,போதிய  படுக்கை வசதிகள் இல்லாமலும் திண்டாடி வருகின்றனர்.

ஒடிசாவில் பாரிபாடா நகரமான மயூர்பஞ்சில் வசிக்கும் பிபுதுத்தா டாஷ் என்பவர், மே 22 ம் தேதி பாரிபடாவில் உள்ள மருத்துவமனையில் அவரது உறவினரை அனுமதித்துள்ளார். இதுகுறித்து  அவர் கூறிய  போது, அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பாரிபடா நகரத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாங்கிசோலில் உள்ள மற்றொரு கோவிட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும் மே 23 ம் தேதியன்று நண்பகலில், எனது உறவினரின் மரணம் குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு நடக்கும் அவலங்கள் குறித்த ஒரு வீடியோ இணையத்தில் வெளியானது. இதுகுறித்து டாஷ் என்பவர் கூறும் போது , 'வீடியோவில் எனது உறவினர் படுக்கையில் உட்கார்ந்து இருப்பதை பார்த்தேன் . அதில் போர்வை மற்றும் தலையணை இல்லாமல்  ஒரு துண்டு மட்டும் அணிந்து இருந்தார். அவர்களில் சிலர் கழிப்பறைக்கு முன்னால் தூங்குகின்றனர். வார்டில் சில ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை  இயக்க கூட அங்கு யாரும் இல்லை என்று மன வேதனையோடு கூறுகிறார்.நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசாங்கம் பெரும் தொகையை செலவிடுகிறது. ஆனால் எல்லா பணமும் எங்கே போகிறது..? யாருக்கு...?' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பாஜக எம்எல்ஏ பிரகாஷ் சேரன் கூறும் போது, ஆக்சிஜன்  இல்லாத நிலையில் பல நோயாளிகள் இறந்து வருகிறார்கள்.  நோயாளிகளுக்கு  என்ன தேவை என்பதை மருத்துவர்கள் புரிந்துகொள்ளவில்லை. செவிலியர்கள் தொற்றுநோய்க்கு பயந்து அவர்களுடன் நெருங்கி வருவதில்லை என்று தெரிவித்துள்ளார் .அதுமட்டுமல்மல் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு கூட கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மருத்துவ ஊழியர்களின் அலட்சியம் காரணமாக தெங்கனல் மாவட்ட தலைமையக மருத்துவமனையின் அவலங்கள் தொடர்பாக, ஜூன் 30 ம் தேதி ஒடிசா சுகாதார செயலாளருக்கு ஆஜராகுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com