இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் 3வது அலை ஆரம்ப கட்டத்தில் உள்ளது
இங்கிலாந்து கொரோனா வைரஸ் 3வது அலை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக தொற்று நோய் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும் புகழ்பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானி ரவி குப்தா எச்சரித்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான இந்திய வம்சாவளி ரவி குப்தா, இங்கிலாந்து அரசின் புதிய மற்றும் அதிகரித்து வரும் சுவாச வைரஸ் அச்சுறுத்தல் ஆலோசனை குழுவின் உறுப்பினராக உள்ளார்,
இவர், இங்கிலாந்து ஏற்கனவே கொரோனா வைரஸ் 3வது அலையின் பாதிப்பில் இருப்பதாகவும், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் முக்கால்வாசி பேரின் உடலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஜூன் 21ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவை சில வாரங்களுக்கு தாமதப்படுத்த வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சனை ரவி குப்தா கேட்டுக் கொண்டுள்ளார்.