க்வாதர் கடலில் மீன் பிடிக்க சென்றவர்களுக்கு 48 கிலோ எடை கொண்ட அட்லாண்டிக் க்ரோக்கெர் மீன் வலையில் சிக்கியுள்ளது.
க்வாதர் கடலில் மீன் பிடிக்க சென்றவர்களுக்கு 48 கிலோ எடை கொண்ட அட்லாண்டிக் க்ரோக்கெர் மீன் வலையில் சிக்கியுள்ளது.
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஞாயிற்றுக் கிழமை அன்று மீன் பிடிக்க சென்ற சாஜித் ஹஜி அபபாக்கருக்கு மிகப்பெரிய லாட்டரி டிக்கெட் அடித்தது.
சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த மீனின் தோல் மற்றும் எலும்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் மருத்துவ காரணங்களுக்காக அதிக விலை கொடுத்து வாங்குவார்கள் .பொதுவாக 1.2 கிலோ எடையே கொண்டிருக்கும் இந்த மீன்கள் அதிக அளவில் இந்த காலக்கட்டத்தில் க்வாதர் கடலில் அதிகம் கிடைக்கும். கடந்தவாரம் ஒருவர் ரூ. 7.8 லட்சத்திற்கு மீனை விற்ற நிலையில் சாஜித் ஹஜி இந்த மீன்களை ரூ. 72 லட்சத்திற்கு விற்றுள்ளார்.எப்போதும் இல்லாத உயர் விலையாக ரூ. 86.4 லட்சத்திறு ஏலம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இவர் மீன்களை ரூ. 72 லட்சத்திற்கு அவர் விற்றதாக கூறியுள்ளார்.