ஆன்லைன் வழியே ஆர்டர் செய்யும் மதுபானங்களை வீட்டுக்கே சென்று வினியோகிக்க டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆன்லைன் வழியே ஆர்டர் செய்யும் மதுபானங்களை வீட்டுக்கே சென்று வினியோகிக்க டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லியிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருப்பதால் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அரசு கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மதுபான விற்பனைக்கு டெல்லியில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மதுபானங்கள் கிடைக்காமல் மது பிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மது அருந்துபவர்களுக்காக தற்போது டெல்லி அரசு ஆன்லைன் வழி மது விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மதுபானம் வாங்க விரும்புபவர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுடைய மொபைல் போனில் அதற்கான செயலி அல்லது இணையதளத்தை பயன்படுத்தி ஆர்டர் செய்யலாம். இருப்பினும் எல்லா மதுபான கடைக்காரர்களும் இந்த விற்பனையில் ஈடுபட முடியாது என்று கூறப்படுகிறது .மேலும் எல்-13 சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே மொபைல் செயலி அல்லது ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்தவர்களுக்கு விநியோகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.