மோடி ஐயா என்ன செய்வது? அதிக வீட்டுப்பாடம் கொடுப்பதாக பிரதமர் மோடியிடம் புகார் அளித்த சிறுமி!

மோடி ஐயா என்ன செய்வது? அதிக வீட்டுப்பாடம் கொடுப்பதாக பிரதமர் மோடியிடம் புகார் அளித்த சிறுமி!
 மோடி ஐயா என்ன செய்வது? அதிக வீட்டுப்பாடம் கொடுப்பதாக பிரதமர் மோடியிடம் புகார் அளித்த சிறுமி!

ஆன்லைன் வகுப்புகள் நீண்டநேரம் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு அதிக வீட்டுவேலை கொடுப்பதாகவும் 6 வயது சிறுமி பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்புகள் நீண்டநேரம் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு அதிக வீட்டுவேலை கொடுப்பதாகவும் காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் தனக்கே உரிய அழகிய மொழியில் பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக   கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. ஆனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகள் நீண்டநேரம் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு அதிக வீட்டுவேலை கொடுப்பதாகவும் காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அந்த சிறுமி தனக்கே உரிய அழகிய மொழியில் தெரிவித்துள்ளார். எனது ஆன்லைன் வகுப்பு காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணிக்கு முடிகிறது.ஆங்கிலம், கணிதம், உருது, சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்களும் நடத்தப்படுகிறது. பின்னர் கம்ப்யூட்டர் வகுப்புகள் நடக்கிறது இதனால் குழந்தைகளுக்கு அதிக வேலை இருக்கிறது. எதற்காக சின்ன குழந்தைகள் இந்த அதிக வேலையை எதிர்கொள்ள வேண்டும். என்ன செய்வது மோடி ஐயா...? வணக்கம். இவ்வாறு என்ற சிறுமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com