கருப்பு பூஞ்சை சிகிச்சையில் அளிக்கப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தை மாத்திரையாக (ஏ.எம்.பி.) ஐதராபாத் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கருப்பு பூஞ்சை சிகிச்சையில் அளிக்கப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தை மாத்திரையாக (ஏ.எம்.பி.) ஐதராபாத் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோயும் பரவி வருகிறது.குறிப்பாக இந்த நோய் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களை தாக்கக்கூடிய அதிக ஆபத்து உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
மியூக்கர் மைக்கோசிஸ் என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சையில் லிபோசோமல் ஆம்போடெரிசின்-பி என்ற மருந்து செலுத்தப்படுகிறது.இந்த மருந்து இந்தியாவில் குறைந்த அளவே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அமெரிக்காவில் இருந்து 10 லட்சம் குப்பிகளை மத்திய அரசு இறக்குமதி செய்கிறது.
கடந்த 2019-ம் ஆண்டு வேதியியல் பொறியியல் துறையைச் சேர்ந்த சப்தர்ஜி மஜும்தார், சந்திரசேகர்சர்மா ஆகியோர் ஏ.எம்.பி. மருந்தை வாய் வழியாக (மாத்திரை) செலுத்துவது தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தினர். இதில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மாத்திரை உருவாக்கப்பட்டுள்ளது.இது குறித்து அவர்கள் கூறும் போது, இது நோயாளிகளுக்கு மிகவும் பயன் அளிக்கும் என்றும் உடலில் உள்ள நச்சுத்தன்மையை குறைக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்.