டிக்டாக் வீடியோவால் 13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்..!

டிக்டாக் வீடியோவால் 13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்..!
டிக்டாக் வீடியோவால் 13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்..!

டிக்டாக்கில் சாகசம் செய்ய முயற்சித்த சிறுமி படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துகிறது.

தொலைக்காட்சிகளிலும், சினிமா படங்களிலும் பார்க்கும் சில சாகசங்கள் ஈர்க்கும் படியாக உள்ளது. ஆனால் அதை நாம் முயற்சிக்கும் போது தான் விபத்து ஏற்படுகிறது. 
அந்த வகையில் ஓரிகானின் போர்ட்லேண்டைச் சேர்ந்தவர் டெஸ்டினி கிரேன். இருக்கு வயது 13. இவர் ஒரு டிக்டாக்கரும் கூட. 
இந்த நிலையில் கடந்த மே 13ஆம் தேதி டிக்டாக்கில் ஒருவர் செய்யும் தீ சாகசத்தை பார்த்து பரவசமடைந்துள்ளார். அதை தானும் செய்ய முற்படும் போது உபகரணங்கள் வெடித்ததில் கழுத்து பகுதி மற்றும் வலது கை தீப்பற்றி எறிந்தது.
இதையடுத்து அவரது பெற்றோர் சிறுமியை மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் அவர் குணமாக பல மாதங்கள் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளது. விளம்பரங்களிலும், சினிமாவிலும் காட்டும் சாகசத்தை ரசிப்பதோடு மட்டுமே நிறுத்திக் கொண்டால் அனைவருக்குமே நல்லது சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com