சீன ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம் இங்குதான் விழுந்தது..!

சீன ராக்கெட்டின் மிகப்பெரிய பாகம் இங்குதான் விழுந்தது..!
தனது விண்வெளி நிலையக் கட்டமைப்புக்காக கடந்த மாதத்தில் சீனா லாங் மார்ச் - 5பி என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இதன் பணி நிறைவடைந்துவிட்டாலும், இந்த ராக்கெட்டின் பாகம் இப்போது கட்டுப்பாடு இல்லாமல் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் வெளியானது. 

18 டன் எடை கொண்ட ராக்கெட்டின் பாகம் பூமியில் எங்கு விழும் என்ற அச்சம் எல்லாருக்கும் இருந்தது. மேலும் இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் உலக நாடுகளின் விவாதமாக மாறி வந்தது. இது குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர். 

தற்போது இந்த ராக்கெட்டின் பாகம் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு அருகே விழுந்துள்ளதாக சீனா தகவல் அளித்துள்ளது. இன்று அதிகாலை பூமியின் காற்று மண்டலத்துக்குள் வந்த ராக்கெட்டின் பாகம் சிறிது நேரத்தில் இந்திய பெருங்கடலில் விழுந்து சிதைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பூமியின் காற்று மண்டலத்துக்குள் இந்த ராக்கெட் பாகம் நுழையும்போது பெரும்பகுதி எரிந்துவிடும் எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்வெளி குறித்து ஆய்வு செய்து வரும் ஸ்பேஸ் டிராக் முகமையும் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்