பள்ளி மாணவிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலி..!

காபூலில் பயங்கர குண்டுவெடிப்பு: பள்ளி மாணவிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலி..!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பெண்கள் பள்ளிக்கு அருகே நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.

காபூலின் மேற்கே சயீத்-உல்-சுஹாதா பெண்கள் பள்ளியில் இருந்து பெண்கள் வழக்கம்போல் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பள்ளியின் பார்கிங் பகுதியில் இருந்த காரில் இருந்து சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. 

அடுத்தடுத்த இரண்டு குண்டுகள் வெடித்ததால் பதற்றம் நிலவியது. இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

பள்ளியில் நடந்த இந்தக் குண்டுவெடிப்புக்கு தற்போதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜானுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த குண்டுவெடிப்பு அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்