சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்..!

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா, உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன.

இந்த நிலையில், சீனா கண்டுபிடித்துள்ள சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்ற 6-வது தடுப்பூசி இதுவாகும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.44%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.56%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்