அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 11 வயது மாணவி கைது..!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 11 வயது மாணவி கைது..!

அமெரிக்காவில் இதாஹோ நகரில் கிழக்கே நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இதில் படித்து வரும் 11 வயதுடைய 6ம் வகுப்பு மாணவி தனது பையில் கைத்துப்பாக்கி ஒன்றை வகுப்பறைக்கு எடுத்து சென்றுள்ளார்.

திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி பல முறை சுட்டதில் 2 மாணவிகள் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தனர்.  தொடர்ந்து வகுப்பில் இருந்து வெளியே வந்த அந்த மாணவி அங்கிருந்த ஒருவரையும் சுட்டுள்ளார்.

துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதில் பள்ளி கூடமே அதிர்ந்துள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் ஒருவர் அந்த மாணவியை பிடித்து, துப்பாக்கியை பறித்து கொண்டு போலிசார் வந்ததும் ஒப்படைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 3 பேருக்கும் பெரிய அளவில் ஆபத்து ஏற்படவில்லை. இப்பினும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்