காதலுக்கு நோ சொன்னதால் லண்டன் பெண் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை.!

காதலுக்கு நோ சொன்னதால் லண்டன் பெண் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை.!

பாகிஸ்தானில் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் லண்டனைச் சேர்ந்த பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட் கிழமை பாகிஸ்தானின் லாகூரில் இருக்கும் குடியிருப்பில் மஹிரா (Mahira Zulfiqar 24) என்ற லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மஹிரா துப்பாக்கியால் சுடபட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும், அவரின் கை மற்றும் கழுத்துப் பகுதியில் அதற்கான காயங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது தொடர்பாக அவரது மாமாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், மஹிரா, தன்னுடைய மாமாவான முகமது நசீரிடம் தனக்கு சாத் அமீர் பட் மற்றும் ஜாஹித் ஜாதூன் ஆகிய இரண்டு பேரும் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்றும் இல்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து அந்த 2 நபர்கள் மீது சந்தேகம் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தான் இந்த கொலை செய்தார்கள் என்பது உறுதியானால் பின்னர் தகவலை வெளியிடுவோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மஹிராவின் செல்போன்களை ஆராய்ந்து வருவதுடன், சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருக்கும் சிசிடிவி கேமராக்களையும் போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்