இந்தியாவை ஒதுக்குகிறதா உலக நாடுகள்: இந்திய பயணிகள் வர தடை விதித்தது இலங்கை..!

இந்தியாவை ஒதுக்குகிறதா உலக நாடுகள்: இந்திய பயணிகள் வர தடை விதித்தது இலங்கை..!

கொரோனா பரவல் காரணமாக இந்திய பயணிகள் இலங்கை வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பால் இந்திய பயணிகள் இலங்கை வர அந்நாட்டு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய பயணிகளுக்கு தடை விதித்து இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தங்கள் நாட்டு மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றிக் கொள்ள இந்த நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்திய பயணிகளுக்கு தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் இலட்சக்கணக்கில் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இதனால் பிற நாடுகளும் இந்தியாவை பார்த்து பயந்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்