32 ஆண்டுகள் தீவில் வாழ்ந்த தாத்தா… திடீரென வெளியேறுவதற்கு காரணம் என்ன?

32 ஆண்டுகள் தீவில் வாழ்ந்த தாத்தா… திடீரென வெளியேறுவதற்கு காரணம் என்ன?
32 ஆண்டுகள் தீவில் வாழ்ந்த தாத்தா… திடீரென வெளியேறுவதற்கு காரணம் என்ன?

இத்தாலியில் ஒரு தீவில் தனி ஆளாய் வசித்த 81 வயது முதியவர், 32 ஆண்டுகளுக்கு பின் தீவை விட்டு வெளியேறினார்.

இத்தாலியில் ஒரு தீவில் தனி ஆளாய் வசித்த 81 வயது முதியவர், 32 ஆண்டுகளுக்கு பின் தீவை விட்டு வெளியேறினார்.

இத்தாலியை சேர்ந்த ராபின்சன் குருசோ என்ற நபர் சுமார் 1939-ஆம் ஆண்டு, இத்தாலி கடற்பகுதியில் நண்பர்களுடன் கடற்பயணம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது ராபின்சன் மற்றும் அவரின் நண்பர்கள் இத்தாலியின் இளஞ்சிவப்பு மணல் கொண்ட கடற்கரையில் உள்ள புடெல்லி என்ற தீவில் தஞ்சமடைந்துள்ளனர்.  அந்நேரத்தில் அந்த தீவினை பாதுகாக்க ஆள் தேடிகொண்டிருக்கும் சமயத்தில் ராபின்சன் தானாக முன் வந்து தீவினை பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றார்.

அதிலிருந்து ராபின்சன் குருசோ என்று அழைக்கப்படும் இவர் மௌரோ மொராண்டி என்று அழைக்கப்பட்டார். மேலும் அவருடன் வந்த மற்ற நண்பர்கள் புடெல்லி தீவினை விட்டு வெளியேறினர்.

கடந்த 32 ஆண்டுகளாக புடெல்லி தீவினை எந்த ஒரு பிரச்சனையுமின்றி பாதுகாத்து வந்ததோடு கடற்கரைகளை அழகாக வைத்திருந்தார். தீவின் சுற்றுச்சூழல் குறித்து சுற்றுலா பயணிகளிடம் பெருமையாக பேசி அதன் சிறப்பம்சங்களை விளக்கி வந்துள்ளார்.

இந்நிலையில் ராபின்சன் குருசோவிற்கு, கடந்த 2016-ஆம் ஆண்டு, தீவை நிர்வகித்து வரும், தேசிய பூங்கா அதிகாரிகள் தீவில் இருந்து வெளியேறும்படி அழுத்தம் கொடுத்து வந்தனர். இதனால் பெரிதும் மனவேதனை அடைந்த ராபின்சன் குருசோ 32 ஆண்டுகளுக்கு பின் தீவில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதுகுறித்து கூறிய ராபின்சன், ”32 ஆண்டுகளாக புடெல்லியை நான் பாதுகாத்து உள்ளதால், எதிர்காலத்தில் புடெல்லி இதுபோல் பாதுகாக்கப்படும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com