பெல்ஜியம் நாட்டில் சமூக ஆர்வலர் ஒருவர், கண்ணாடி கூண்டினால் ஆன செடிகளுடன் கூடிய மாஸ்க்கை அணிந்து கொண்டு வலம் வருகிறார்
பெல்ஜியம் நாட்டில் சமூக ஆர்வலர் ஒருவர், கண்ணாடி கூண்டினால் ஆன செடிகளுடன் கூடிய மாஸ்க்கை அணிந்து கொண்டு வலம் வருகிறார். இவரை பார்க்கும் பலரும் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மாஸ்க் அணிவது கட்டாயம்.
இந்த நிலையில், பெல்ஜியத்தில் கலைஞர் ஆலியன் வெர்சூரன் என்ற சமூக ஆர்வலர், வித்தியாசமான முறையில் மாஸ்க் அணிந்து பலரையும் கவர்ந்து வருகிறார். புருசல்ஸ் வீதிகளில் நடந்து செல்லும்போது கண்ணாடி கூண்டினால் ஆன மாஸ்க்கை அணிந்து செல்கிறார்.
அதில், நறுமணமிக்க செடிகள் உள்ளன. அது பார்க்க பச்சை பசேல் ஆக இருப்பதால் பசுஞ்சோலை மாஸ்க் எனக் கூறும் அளவுக்கு உள்ளது. ஆலியன் அணிந்திருக்கும் மாஸ்க் கொரோனா பரவலில் இருந்து பாதுகாப்பதுடன் தூய்மையான காற்றை கொடுக்கிறது.
61 வயதான இவர், இந்த யோசனையை 15 ஆண்டுகளுக்கு முன்பே யோசித்துள்ளார். துனிசியாவில் இவர் பணியாற்றிய போது பசுமையான சோலைகளால் கவரப்பட்டுள்ளார். தற்போது இது போன்ற மாஸ்கை அவர் வடிவமைத்துள்ளார்.
ஆஸ்துமா நோயாளியான இவருக்கு இந்த கண்ணாடியிலாலான மாஸ்க் தூய்மையான காற்றை கொடுத்து பாதுகாக்கிறது. இவரை பார்க்கும் பலரும், அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.