விடாமல் துரத்தும் கொரோனா : நீர்நாய்களுக்கும் கொரோனா தொற்று உறுதி…!

 விடாமல் துரத்தும் கொரோனா: நீர்நாய்களுக்கும் கொரோனா தொற்று உறுதி…!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், அட்லாண்டா நகரில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரின காட்சி கூடத்தில் உள்ள நீர்நாய்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஓராண்டிற்கு மேலாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த  நிலையில் இந்த வைரசை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது.மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள்,பறவைகள் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், அட்லாண்டா நகரில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரின காட்சி கூடத்தில், நீர்நாய்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நீர் நாய்களில் சிலவற்றிற்கு சளி, தும்மல் போன்ற அறிகுறிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது , தற்போது அனைத்து நீர்நாய்களும் பூரண நலத்துடன் இருப்பதாகவும், விரைவில் பாதிக்கப்பட்ட அனைத்தும் நலம் பெற்று பாதிப்பிலிருந்து மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்