பாகிஸ்தான் சென்ற சீன தூதர்: நட்சத்திர ஹோட்டலில் காத்திருந்த கொடூர தாக்குதல் சம்பவம்..!

பாகிஸ்தான் சென்ற சீன தூதர்: நட்சத்திர ஹோட்டலில் காத்திருந்த கொடூர தாக்குதல் சம்பவம்..!

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலோசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் அமைந்துள்ளது பிரபல நட்சத்திர ஹோட்டல். இங்கு திடீரென வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்ட சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டலின் கார் பார்க்கிங் பகுதியில் நடைபெற்ற இந்த வெடி குண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில், சீன தூதர் உள்பட சீனாவின்  உயர் மட்ட அதிகாரிகள் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவினர் இந்த ஹோட்டலில்தான் தங்கியிருந்துள்ளனர். இருப்பினும், குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் சீன தூதர் குறிப்பிட்ட ஹோட்டலில் இல்லை என்று கூறப்படுகிறது. இது ஒரு பயங்கரவாத செயல் என்று பாகிஸ்தான் உள்துறை மந்திரி  ஷேக் ரஷித் அகமது தெரிவித்துள்ளார்.  துப்பாக்கிச்சூடு நடந்த ஹோட்டல்முழுவதும் தற்போது பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானி தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் தற்கொலைப்படை தாக்குதல் எனவும் பாகிஸ்தானி தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.55%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.45%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்