’கைலாசாவில் இந்தியர்களுக்கு இடமில்லை’: நித்தி அதிரடி!

’கைலாசாவில் இந்தியர்களுக்கு இடமில்லை’: நித்தி அதிரடி!

கொரோனா நோய்த்தொற்று பரவலின் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரம் அடைந்துள்ளதால் இந்தியாவிலிருந்து கைலாசா வரும் பக்தர்களுக்குத் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். 

பாலியல் புகார், ஆள் கடத்தல் வழக்குகள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிப் பிரபலமானவர் நித்தியானந்தா. சமீபத்தில் கைலாசா என்ற பெயரில் தனித் தீவு ஒன்றினை உருவாக்கி, அதற்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அனைத்தையும் அறிவித்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தார். மேலும், கைலாசாவில் வியாபாரம் செய்வதற்கான வழிவகைகளையும் அறிவித்திருந்தார். அதைப் பார்த்து கைலாசாவில் ஹோட்டல், டீ கடை எனத் தொழில் செய்து பிழைக்க பலர் நித்தியானந்தாவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பியிருந்தனர்.

ஆனால், இன்று வரை அந்த கைலாசா தீவு எங்கு இருக்கிறது என்பதற்கான விடை மட்டும் கிடைத்தபாடில்லை. கைலாசா எங்கு உள்ளது என்பது நித்தியானந்தாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். 

இந்நிலையில், நேற்று முன்தினம் கொரோனா நோய்த்தொற்று பரவலின் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரம் அடைந்துள்ளதால் இந்தியாவிலிருந்து கைலாசா வரும் பக்தர்களுக்குத் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். 

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்தியா செல்ல பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதேபாணியில் நித்தியானந்தாவும், இந்திய பக்தர்களுக்கு கைலாசா நாட்டிற்கு வர தடை விதித்துள்ளார்.

கடந்த 19ம் தேதியிட்டு, நித்தியானந்தாவின் கைலாசா நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பாணையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ``கொரோனா நோய்த்தொற்றின் பரவல் பல நாடுகளில் தீவிரமடைந்துள்ளதால் கைலாசா நாட்டிற்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் மிகுதியாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கைலாசாவில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.55%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.45%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்