காணாமல் போன பூனைக்குட்டி: மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடிப்பு.

தாய்லாந்து நாட்டில் கிரேசியா என்ற சிறுமி செல்லப்பிராணியாக ஒரு பூனையை வளர்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பூனைக்குட்டி திடீரென மாயமாகியுள்ளது. சில நேரம் தேடிய பிறகு சிறுமி வருத்தத்துடன் இருந்துள்ளாள். அதன்பின் வீட்டின் சமையலறைக்கு சென்று பார்த்த சிறுமிக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அங்கு ஒரு மலைப்பாம்பு எதையோ உன்றுவிட்டு நகர முடியாமல் இருந்ததை கண்டு வீட்டில் இருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வனத்துறையினர் விரைந்து வந்து அந்த பாம்பை மீட்டனர். அதன்பின் தான் அந்த பாம்பு பூனை குட்டியை விழுங்கியது தெரிய வந்தது. மலைபாம்பு தனது பூனைக்குட்டியை விழுங்கியதை நினைத்து சிறுமி கண்ணீர் விட்டு கலங்கியது காண்போரை கண்ணீரில் ஆழ்த்தியது.
Pollsகருத்துக் கணிப்பு

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
-
ராஜஸ்தான் ராயல்ஸ்
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

பூனைக்கு தாயாக மாறிய நாய்!
