எந்த பொண்ணுக்கும் இந்த நிலைமை வரக்கூடாதுங்க… தலையில் இடியாக விழுந்த செய்தி..!

எந்த பொண்ணுக்கும் இந்த நிலைமை வரக்கூடாதுங்க… தலையில் இடியாக விழுந்த செய்தி..!

4 ஆண்டுகள் பெற்றோரை பார்க்காத மகளுக்கு இடியாக தன் தாயின் மரண செய்தி வந்ததால் பைத்தியம் பிடித்தது போல் மாறியுள்ளார் அப்பெண். 

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் மேரி. இவர் துபாயில் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகிறார். பணி காரணமாக மேரி அங்கேயே இருந்துவிட்ட நிலையில், அவரது பெற்றோர் மட்டும் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் மேரியின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் மேரிக்கு வந்தது. இதனால் தனது அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அவர் இங்கிலாந்திற்குப் புறப்படத் தயாரானார்.

இதையடுத்து விமானத்தில் இங்கிலாந்து வந்திறங்கிய மேரி, பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு தனது செல்போனை ஆன் செய்துள்ளார். அப்போது அவரது மொபைலுக்கு வந்த மெசேஜை பார்த்த மேரியின் இதயம் சுக்குநூறாக நொறுங்கிப் போனது.

அவருக்கு வந்த அந்த குறுஞ்செய்தியில், மேரியின் தாய் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இறந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்ததும் மேரி அதே இடத்திலேயே கதறி அழுதார். மேரியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த அதிகாரிகள் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்து விட்டதோ என ஓடி வந்தனர்.  இதையடுத்து நடந்த விவரங்களைக் கேட்ட அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தினார்கள்.

இதனை தொடர்ந்து அம்மாவை உயிருடன் தான் பார்க்க முடியவில்லை, அவரது முகத்தையாவது பார்க்கலாம் என அவரது வீட்டிற்குக் கிளம்ப தயாரான மேரிக்கு இன்னொரு செய்தி இடியாக வந்தது. அதாவது, மேரி துபாயிலிருந்து வந்த நிலையில், துபாய், இங்கிலாந்தில் சிவப்பு பட்டியலில் இருப்பதால் மேரி 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதன் பிறகு தான் அவர் தனது வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

4 வருடங்கள் கழித்து அம்மாவைப் பார்க்க வந்தால், அவரை உயிருடன் பார்க்க முடியவில்லை. இதனால் இறுதியாக அவரது முகத்தையாவது பார்க்கலாம் என மேரி நினைத்த நிலையில் அதுவும் நடக்காமல் போக, மேரி தற்போது பைத்தியம் பிடித்தது போல ஆகி விட்டார். தனிமைப்படுத்துதல் விதியின் படி, மேரி ஏப்ரல் 12ம் தேதிக்குப் பின்னர் நேரடியாகத் தனது தாயின் இறுதிச் சடங்கிற்கு மட்டுமே செல்ல முடியும்.

இதனால் கடைசி வரை மேரியால் அவரது தாயின் முகத்தைப் பார்க்க முடியாமல் போயுள்ளது. இதனால் ஜூம் வழியாகத் தாயின் இறுதிச் சடங்கை ஒழுங்கு செய்வதில் தனது தந்தைக்கு உதவி வருகிறார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்