இந்தியாவை விடாமல் துரத்தும் வைரஸ்கள் ! எட்டு நாய்கள் பலி .... மக்கள் பீதி

நாய்களுக்கிடையே ஒரு புதிய வைரஸ் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் புதிய வகை பர்வோ வைரஸ் ஒன்று பரவி வருகிறது.இந்த வைரஸ் பெரும்பாலும் நாய்கள் இடையே பரவி வருகிறது என்று கூறப்படுகிறது.கொரோனாவின் கோரப்பசிக்கு இரையாகி இன்னும் அதிலிருந்து மீளாத நிலையில் தற்போது புதிய வைரஸ் பரவி வருகிறது .மத்திய ,மாநில அரசுகளும் வைரஸ் பரவ விடாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே கான்பூரில் பரவி பர்வோ வைரஸ் பரவி வருகிறது. இதுவரையில் எட்டு நாய்கள் இறந்ததுள்ளன.அந்த எட்டு நாய்களுக்கும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.அதில் நாய்களின் குடல் சிதைந்ததாகவும் ,இறப்பதற்கு முன்பு ரத்த வாந்தி எடுத்ததாகவும் கூறப்பட்டது.மேலும் இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரஸ் எனவும் கூறப்படுகிறது .இந்த வைரஸ் நாய்களின் இரைப்பை மற்றும் குடலை பாதிக்கும் என்றும் தக்க சமயத்தில் பார்த்து சிகிச்சை அளிக்காவிட்டால் நாய்கள் இறக்கக் கூடும் எனவும் கூறியுள்ளனர்.இதனால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Pollsகருத்துக் கணிப்பு

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
-
ராஜஸ்தான் ராயல்ஸ்
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

பூனைக்கு தாயாக மாறிய நாய்!
