பார்பர் ஆன தலைமை பேராசிரியர்… நெகிழ்ச்சியான மாணவன்..!

பார்பர் ஆன தலைமை பேராசிரியர்… நெகிழ்ச்சியான மாணவன்..!

அமெரிக்காவில் உள்ள பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் தன் மாணவனுக்காக  முடிவெட்டும் பார்பர் ஆகியுள்ளார். 

அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்டில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பள்ளியில் ஆந்தோனி மூர் என்ற 14 வயது மாணவன் தலையில் தொப்பியுடனே சுற்றி திரிந்துள்ளான். இதனைக் கண்ட அப்பள்ளியின் தலைமை பேராசிரியர், ”ஏன் உன் தொப்பியை கழட்ட மறுக்கிறாய்?” என கேட்டுள்ளார். 

அதற்கு அம்மாணவனோ,” என் பெற்றோர் எனக்கு புதிய ஹேர் ஸ்டைலை செய்வதாக சொன்னனர். ஆனால், அதன் முடிவு எனக்கு பிடிக்கவில்லை. அதனால்தன் நான் தொப்பியை மாட்டிக் கொண்டுள்ளேன்” என்றான். 

இதனைத் தொடர்ந்து, தலைமை பேராசிரியரான ஜேசன் ஸ்மித்தே அம்மாணவனுக்கு தலைமுடி வெட்டியுள்ளார். 

இதுகுறித்து தெரிவித்த அவர்,” நான் சின்ன வயதிலிருந்தே முடி வெட்டி வருகிறேன். என் மகனுக்கும் நான்தான் முடி வெட்டுவேன். அதை நான் மூருக்கும் காண்பித்து அவனுக்கும் முடி வெட்டினேன்.” என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்