மிகக்குறைந்த செயல்திறன் கொண்ட சீனாவின் கொரோனா தடுப்பூசி

மிகக்குறைந்த செயல்திறன் கொண்ட சீனாவின் கொரோனா தடுப்பூசி: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி
சீனாவின் சினோவக் கொரோனா தடுப்பூசி 50.4 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என தெரியவந்துள்ளது.
2019 டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி, அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நல்ல பலன் தருகிறது. இந்த தடுப்பூசிகளின் செயல்திறன் 90 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது.
சீனாவும் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அந்நாட்டின் சினோவக் பயொடெக் நிறுவனம் சினோவக் என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி 90 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என சீன நிறுவனம் தெரிவித்திருந்தது. சீனாவின் சினோவக் நிறுவன கொரோனா தடுப்பூசியை பிரேசில் நாடு வாங்கியது.
இதையடுத்து, சீனாவின் சினோவக் தடுப்பூசியை தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் நடைமுறைகள் பிரேசிலில் நடைபெற்றது. இதன் பரிசோதனை முடிவில், சீனாவின் சினோவக் தடுப்பூசி 50.4 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என தெரியவந்துள்ளது. மாடர்னா, பைசர், ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகளை ஒப்பிடும் போது சீனாவின் தடுப்பூசி மிகவும் குறைவான செயல்திறன் கொண்டதாக உள்ளது.
சீனாவின் சினோவக் அங்கீகரிக்கக்கூடிய செயல்திறனை கூட இல்லாமல் இருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
    28.4%
  • அனுபவக் குறைவு
    24.39%
  • கிரிக்கெட் அரசியல்
    35.54%
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
    11.67%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்