அழிந்துவிட்டதாக நினைத்த அரியவகை தேனீ இனம்: இந்தோனேசியாவில் மீண்டும் கண்டுபிடிப்பு!

அழிந்துவிட்டதாக கருதப்பட்ட உலலின் மிகப்பெரிய அரியவகை தேனீ இனம், இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1859ம் ஆண்டு இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவில் அரியவகை தேனீ கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற தேனீக்களை ஒப்பிடும் போது இது அளவில் நான்கு மடங்கு பெரியதாகும். இதன் உருவத்திலும் சில மாற்றங்கள் உள்ளன. இந்த அரியவகை தேனீ இனத்திற்கு Megachile pluto என்று பெயர்.
ஆனால் அதன்பிறகு இந்த தேனீக்களை யாராலும் பார்க்க முடியவில்லை. இந்த இனம் அழிந்து விட்டதோ என்ற சந்தேகமும் பலருக்கு இருந்தது. அதனால் இந்த தேனீயை கண்டுபிடிப்பதற்காக 2018ம் ஆண்டு ஒரு குழு தயாரானது.
இந்நிலையில், இந்தோனேசியாவில் இந்த தேனீ இனம் இருக்க வாய்ப்புள்ளதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனால் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் புளூட்டோ தேனீ இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த இனம் அழிந்து விட்டதென நினைத்த நிலையில், தேனீ மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

பூனைக்கு தாயாக மாறிய நாய்!


ஆல்கஹால் பாட்டிலைகளை அடித்து நொறுக்கிய பெண்.
