முதியவர்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்: அமீரக செய்தி தொடர்பாளர் தகவல்!

முதியவர்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்: அமீரக செய்தி தொடர்பாளர் தகவல்!

அமீரகத்தில் விரைவில் முதியவர்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் டாக்டர் பரிதா அல் ஹொசானி தெரிவித்தார்.

இதுகுறித்து, அபுதாபி சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் டாக்டர் பரிதா அல் ஹொசானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ”உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரசின் அடுத்த மரபணு உருமாற்றமான சார்ஸ் கோவிட் 2 என்ற வகையானது தற்போது பரவி வருகிறது. இதில் வைரசின் உருமாற்றங்களை அடையாளம் காணும் முயற்சிகளை தொடர வேண்டியது அவசியமாகும். தொடர்ந்து புதிய வகை தொற்று பரவாமல் தடுக்கவும், அதன் தீவிரத்தன்மை அதிகரிக்காமல் தொடரவும் தடுப்பூசி முக்கியமான தீர்வுகளில் ஒன்றாக உள்ளது.” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ”அமீரக சுகாதாரத்துறையின் சார்பில் தொடர்ந்து நிபுணர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் ஒத்துழைப்புடன் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அமீரக சுகாதாரத்துறை கொரோனா வைரசை கையாளுவதில் தனது திறனை நிரூபித்துள்ளது. சுகாதார மையங்கள் மற்றும் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்ததன் மூலம் கொரோனா பரவலானது கண்டுபிடிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.

இதில் தற்போது முதியவர்களுக்கு அவரவர் வீடுகளுக்கே ஊழியர்கள் சென்று கொரோனா தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டமானது செயல்படுத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.4%
 • அனுபவக் குறைவு
  24.39%
 • கிரிக்கெட் அரசியல்
  35.54%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.67%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்