16 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை: முடிவுக்கு வந்த அமெரிக்க கர்ப்பிணி பெண் கொலை வழக்கு!

16 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை: முடிவுக்கு வந்த அமெரிக்க கர்ப்பிணி பெண் கொலை வழக்கு!

அமெரிக்காவில் 23 வயது கர்ப்பிணியை கொடூரமாக கொலை செய்த பெண் குற்றவாளிக்கு 16 ஆண்டுகளுக்குப் பின் மரண தண்டனை நிறைவேற்றம்.

கடந்த 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிடோரி மாகாணத்தைச் சேர்ந்த லிசா மாண்ட்கோமேரி என்பவர், 23 வயதான பாபி ஜோ ஸ்டினட் என்ற கர்ப்பிணி பெண்ணை கயிற்றால் கழுத்தை நெறித்து, பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தொடர்ந்து இறந்த அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை எடுத்துக் கொண்டு தனது குழந்தை என கூறியுள்ளார் கொலையாளி லிசா மாண்ட்கோமேரி. இந்த வழக்கு விசாரணை கடந்த 16 ஆண்டுகளாக நடந்து வந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கில் கர்ப்பிணியை கொடூரமாக கொலை செய்த பெண் குற்றவாளிக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. 

அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர், 6 வயது சிறுவனைக் கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக 1953 ஆம் ஆண்டு போன்னி பிரவுன் ஹெடி என்ற பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பின், 68 ஆண்டுகள் கழித்து பெண் கைதிக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான தடைகளை அகற்றி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.45%
 • அனுபவக் குறைவு
  24.43%
 • கிரிக்கெட் அரசியல்
  35.6%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்