சைக்கிள் ஓட்டிய பிரதமர் போரிஸ் ஜான்சன்: ஊரடங்கை மீறியதால் சர்ச்சை

சைக்கிள் ஓட்டிய பிரதமர் போரிஸ் ஜான்சன்: ஊரடங்கை மீறியதால் சர்ச்சை

உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்தில் ஊரடங்கை பிறப்பித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரே ஊரடங்கை மீறி சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில் கொரோனா தொற்று பாதித்தவர்களை விட, தற்போது அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகளவில் கொரோனா தொற்றுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகளில் பிரிட்டனும் ஒன்று.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா பரவல் காரணமாக, தேசிய அளவிலான ஊரடங்கை பிரதமர் போரிஸ் ஜான்சன் அமல்படுத்தினார்.  

இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது வீட்டிலிருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு ஏழு மைல்  தூரம் உள்ள ஸ்டார்ட்போர்ட் பகுதியில் உள்ள ஒலிம்பிக் பூங்காவுக்கு சென்றுள்ளார். உடற்பயிற்சிக்காக அவர் சென்றதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. 

இருப்பினும் ஊரடங்கு போட்டுவிட்டு அதனை பிரதமரே மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதேபோல், அந்நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பிரதமரின் நடவடிக்கையை கண்டித்துள்ளது. உடற்பயிற்சி செய்ய கொரோனா விதிகளில் அனுமதி உண்டு என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் அடிப்படையிலேயே போரிஸ் ஜான்சன் செயல்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்