ஊரடங்கில் ஊர் சுற்ற கணவனை நாயாக பயன்படுத்திய பெண்.

கனடா நாட்டில் ஊரடங்கில் வாக்கிங் செல்வதற்காக தனது கணவனை செல்லப்பிராணி என கூறி சங்கிலி கட்டி அழைத்து சென்ற பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.
கனடா நாட்டின் கியூபெக் நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கில் அத்தியாவசிய பணியாளர்கள் பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் வாக்கிங் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஷெர்ப்ரூப் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் ஊரடங்கின் போது வாக்கிங் செல்வதற்காக தனது கணவனை நாய் போல் கழுத்தில் சங்கிலியை மாட்டி வீதியில் கூட்டி சென்றுள்ளார் அப்போது போலீசார் அவரை பிடித்து கேள்வி கேட்கையில், "செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் வாக்கிங் செல்லலாம் தானே. அதைத்தான் நான் செய்கிறேன்" என கூறி போலீசாருக்கு ஷாக் கொடுத்துள்ளார் அப்பெண்மணி. பின்னர் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக அந்த தம்பதியினருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
28.45% -
அனுபவக் குறைவு
24.43% -
கிரிக்கெட் அரசியல்
35.6% -
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
11.52%
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

பூனைக்கு தாயாக மாறிய நாய்!


ஆல்கஹால் பாட்டிலைகளை அடித்து நொறுக்கிய பெண்.
