ஒரே நாளில் கொரோனாவுக்கு 4,000 பேர் உயிரிழப்பு

ஒரே நாளில் கொரோனாவுக்கு 4,000 பேர் உயிரிழப்பு: அமெரிக்கர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.89 லட்சத்தைத் தாண்டியது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.19 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 6.58 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 19.68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

உலக அளவில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

 அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.33 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.89 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.37 கோடியைத் தாண்டியுள்ளது. 91 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்