தனது உடலில் உள்ள பெரிய மச்சத்தை பார்த்து கவலைப்பட்ட 8 வயது மகனுக்காக 30 மணி நேரம் செலவிட்டு அதே போல் பச்சை குத்திக் கொண்டுள்ளார் கனடாவைச் சேர்ந்த நபர் ஒருவர்.
தனது உடலில் உள்ள பெரிய மச்சத்தை பார்த்து கவலைப்பட்ட 8 வயது மகனுக்காக 30 மணி நேரம் செலவிட்டு அதே போல் பச்சை குத்திக் கொண்டுள்ளார் கனடாவைச் சேர்ந்த நபர் ஒருவர்.
கனடாவில் உள்ள ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த டெரெக் ப்ரூ சீனியர் என்பவரின் 8 வயது மகனுக்கு மார்பில் ஒரு பெரிய பிறப்பு அடையாளம்(மச்சம்) இருக்கும். அச்சிறுவனோ, தனது உடலில் இருந்த பெரிய மச்சத்தை பார்த்து கவலைப்பட்டு கொண்டே இருப்பாராம். தன்னுடைய மச்சத்தை அசிங்கம் என கவலைப்பட்ட அச்சிறுவன், மிகவும் சுய நம்பிக்கை இல்லாதவராகவே தன்னை கருதிக் கொண்டுள்ளார்.
இதனை உணர்ந்த அச்சிறுவனின் தந்தை டெரெக் ப்ரூ சீனியர், தன் மகனுக்கு இருக்கும் மச்சத்தைப் போல தன் உடலிலும் ஒரு அடையாளத்தை உருவாக்க எண்ணினார். அதன்படி, தன் மகனுக்கு இருக்கும் மச்சத்தை போல தன் உடலில் டாட்டூ ஒன்றை குத்திக் கொண்டார்.
இந்த டாட்டூவை குத்த 30 மணி எடுத்ததாக கூறும் டெரெக் ப்ரூ சீனியர், தன் மகனின் சந்தோஷத்தையும் நம்பிக்கையுமே முக்கியம் என்பதால் மட்டுமே இந்த விஷயத்தை செய்ததாக தெரிவித்துள்ளார்.