ஏஞ்சலினா ஜோலி போல் மாற நினைத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட சாஹர் தபாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏஞ்சலினா ஜோலி போல் மாற நினைத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட சாஹர் தபாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய பெண் சாஹர் தபார் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியை போல் தன்னை மாற்றிக் கொள்வதற்காக ஏராளமான பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது முகம் வேறு விதமாக மாறிவிட்டது. இதனால் இணையத்தில் பலரும் இவரை ஜாம்பி ஏஞ்சலினா ஜோலி என்று அழைத்தனர்.
இந்நிலையில் இவர் மீது கலாச்சார குற்றங்கள், ஊழல் உள்ளிட்ட வழங்குகளில் 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழலில் மற்றவர்களை தவறாக வழிநடத்தியது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக அவர் பேசியதற்காகவும் அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தன.
அத்துடன் அவரது இன்ஸ்டாகிராமில் எடிட் செய்த போலி போட்டோகள் பலவற்றை வெளியிட்டு ஏமாற்றியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.