3.4 மில்லியன் பணத்தை வீணாக்கிய 17 வயது யூடியுபர்..

3.4 மில்லியன் பணத்தை வீணாக்கிய 17 வயது யூடியுபர்..


அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடைபெற்ற ஒரு வீடியோ படபிடிப்பின்போது 17 வயதான யூடியூபர் கேஜ் கில்லியன் என்பவர்
3.4 மில்லியன் (இந்திய மதிப்பில் 25 கோடி ரூபாய்) மதிப்புள்ள தனது தந்தையின் பகானி ஹூயரா ரோட்ஸ்டரை (Pagani Huayra Roadster) அடித்து நொறுக்கினார். அந்த சம்பவத்தில் கேஜ் கில்லியன் மற்றும் அவரது நண்பர்கள் உயிர் மயிரிழையில் தப்பித்தது என்றே சொல்லலாம்.

வீடியோத் தளமான யூடியூப் (YouTube), பணம் சம்பாதிப்பதற்கும், துரிதமாக பிரபலமடைவதற்கும் பெயர் பெற்றது.  உலகெங்கிலும் உள்ள ஏராளமான யூடியூப் பிரியர்களை திருப்திப்படுத்த இந்த்த் துறையில் உள்ளவர்கள் கடும் சிக்கல்களையும் சமாளிக்கின்றனர். பல சமயங்களில் ஹிட்டடிக்கும் முயற்சிகள், சில சமயங்களில் சொதப்பி விடுகின்றன. இது ஒருசில சமயங்களின் உயிருக்கே உலை வைக்கிறது.  

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் 17 வயதான யூடியூபர் கேஜ் கில்லியன் இப்படி ஒரு அபாயகரமான விஷயத்தில் ஈடுபட்டார். தனது நண்பருடன் சேர்ந்து 3.4 மில்லியன் டாலர் மதிப்புள்ள தனது தந்தையின் பகானி ஹூயரா ரோட்ஸ்டரை ஒரு வீடியோ படப்பிடிப்பில் அடித்து நொறுக்கினார்.

விபத்துக்கு முன்னர் படமாக்கப்பட்ட வீடியோவை கேஜ் கில்லியன் நீக்கிவிட்டார். விபத்துக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார், அதில் அவர் விபத்து மற்றும் காயங்கள் பற்றிய தகவல்களை கொடுத்திருந்தார். கார் விரும்பியான அவர் தனது நண்பர் ஜாக் (Zack) உடன் சேர்ந்து ஒரு வீடியோவை தயாரிப்பதாக தெரிவித்தார்.

சில நேரங்களில் வாகனங்கள் எதிர்பாராத விபத்துகளையும் ஏற்படுத்தும் என்பதை அவர் கவனத்தில் கொள்ளவில்லை. தனது தவறினால் தான் விபத்து நேரிட்டதாகவும் அவர் ஒப்புக் கொண்டார். 


தங்களை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்வதாக கூறும் யூடியூபர், அவசரகதியில் காட்டுத்தனமாக வாகனம் ஓட்டும் நபர்களுக்கு ஒரு செய்தியைக் கொடுத்தார், வாகனங்களை மாற்றிவிடலாம், ஆனால் மனிதர்களை மாற்ற முடியாது என்ற இயல்பான, ஆனால் தாக்கம் மிகுந்த உணர்வுபூர்வமான விழிப்புணர்வு செய்தி அது. 


கேஜ் கில்லியன் தற்போது யூடியூபில் இருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார். இந்த விபத்தில் இருந்து பிறர் பாடம் கற்றுக் கொள்வார்கள், எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று அவர் நம்புகிறார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.4%
 • அனுபவக் குறைவு
  24.39%
 • கிரிக்கெட் அரசியல்
  35.54%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.67%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்