2021-ல் இந்தியாவில் பெகாட்ரான் துணை நிறுவன திட்டப்பணி ஆரம்பம்..!

உலகளவில் விஸ்ட்ரான், ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான் ஆகியவை மொபைல் ஃபோன் சப்ளையர்களில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அதில், விஸ்ட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய இரண்டும் ஏற்கனவே இந்தியாவில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளன. இந்த நிலையில் தைபேவை தளமாகக் கொண்ட பெகாட்ரான் தனது துணை நிறுவனத்தை இந்தியாவின், சென்னையில் தொடங்க 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பதிவு செய்யதது. இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் வேலைப்பாடுகளை தொடங்க திட்டமிட்டது. மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா அதிக அளவு முதலீட்டை ஈட்டவும் வழிவகை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பெகாட்ரான் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி. லியாவோ சி-ஜாங் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தனர். மேலும், இந்தியாவில் உற்பத்தி வசதிகளை அமைப்பதற்காக 150 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பீட்டில் ரூபாய் 1,100 கோடி ஆரம்ப முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் இந்தியாவை ஏற்றுமதி உற்பத்தி மையமாக மாற்றும் என நம்பப்படுகிறது.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

பூனைக்கு தாயாக மாறிய நாய்!


ஆல்கஹால் பாட்டிலைகளை அடித்து நொறுக்கிய பெண்.
