போதைக்காக சானிடைசர் குடித்த 7 பேர் உயிரிழப்பு..!

போதைக்காக சானிடைசர் குடித்த 7 பேர் உயிரிழப்பு..!

மதுபானம் கிடைக்காததால் குடிபோதைக்காக சானிடைசர் குடித்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 20,64,748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 35,778 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை அன்று ரஷ்யாவில் 24,822 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவில் ஒரு விருந்தின் போது, ​​மதுபானம் பற்றாக்குறையால் சானிடைசரை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் டாட்டின்ஸ்கி மாவட்டத்தில் உள்ள டொமடோர் கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விருந்தின்போது, மதுபானம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அப்போது, சிலர் மதுபோதைக்காக சானிடைசர் குடித்துள்ளனர். சானிடைசர் குடித்த 7 பேர் உயிரிழந்தனர். கோமா நிலைக்குச் சென்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.45%
 • அனுபவக் குறைவு
  24.43%
 • கிரிக்கெட் அரசியல்
  35.6%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்