கோமாவில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த மருத்துவர்…

கோமாவில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த மருத்துவர்…

கொரோனாவால் கோமாவுக்கு செல்லப்பட்ட மருத்துவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பர்மிங்காம் நகர மருத்துவமனையில் முடக்குவாத நோய் சிகிச்சை மருத்துவ ஆலோசகராக இருக்கிறார் பர்பெச்சுவல் உகே. இவருக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக உடல் நலம் சரியில்லை என தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். 

இதனை தொடர்ந்து அவருக்கு அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவர் கர்ப்பமாக இருந்தார். அவரது வயிற்றில் இரட்டை குழந்தை வளர்ந்து கொண்டிருந்தன.

26 வாரங்களே ஆன பிறகு பிரசவம் நடந்தது. சிசேரியன் மூலம் நடந்த பிரசவத்தில் உகேவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

கோமாவில் இருந்து குணமடைந்த பின்னர் யுகே அவர் குழந்தைகளை இழந்து விட்டதாக அஞ்சினார். இது குறித்து அவர் கூறுகையில் "கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்னர் என் வயிற்றை பார்த்த போது, என் குழந்தைகள் நான் இழந்துவிட்டதாக நான் நினைத்தேன்," என்று கூறினார். "இது நடந்தது ஒரு அதிசயம். என்றும் கூறினார்

அவருக்கு பிறந்த சொசிகா பால்மர் என்ற குழந்தை 770 கிராம் எடையும் அதன் சகோதரர் ஒசினாசி பாஸ்கல் 850 கிராம் எடையும் இருந்தன. ஆனால் பிரசவம் நடந்த பிறகும் குழந்தைகளின் தாய் உகே அடுத்த 16 நாட்களுக்கு கோமா நிலையிலேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்