1000 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு..!

1000 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு..!

பாகிஸ்தானில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்து விஷ்ணு கோவிலை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

1,300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படும் ஒரு இந்து கோவில், பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்பொருள் நிபுணர்களால் வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது பாரிகோட் குண்டாய் மலைப் பகுதியில், அகழ்வாராய்ச்சியின்போது கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்து விஷ்ணு கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கைபர் பக்துன்க்வா தொல்பொருள் துறையின் பாஸல் காலிக் அறிவித்துள்ளார். இந்து சாஹி அரச வம்ச காலத்தில் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்களால் கட்டப்பட்டது என்றார். 

ஸ்வாட் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்பொருள் இடங்கள் உள்ளன என்றும், இந்து சாஹி காலத்தின் தடயங்கள் இப்பகுதியில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் காலிக் கூறினார்.

இந்து சாஹிஸ் அல்லது காபூல் ஷாஹிஸ் (கி.பி.850- 1,026) என்பது காபூல் பள்ளத்தாக்கு (கிழக்கு ஆப்கானிஸ்தான்), காந்தாரம் (இன்றைய பாகிஸ்தான்) மற்றும் வடமேற்கு இந்திய பகுதிகளை ஆண்டவர்கள் இந்து சாஹிகள். 

அகழ்வாராய்ச்சியின் போது, ​​தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கோவில் இடத்துக்கு அருகில் கன்டோன்மென்ட் மற்றும் காவற்கோபுரங்களின் தடயங்களையும் கண்டறிந்தனர். கோவில் தளத்துக்கு அருகே ஒரு தண்ணீர் தொட்டியை வல்லுநர்கள் கண்டுபிடித்தனர், இது இந்துக்கள் வழிபாட்டுக்கு முன்பு குளிக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்