டால்க் பவுடர்.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கிய நஷ்ட ஈடு குறைப்பு..!

ஜான்சன் அண்ட் ஜான்சன்.. டால்க் பவுடர்.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கிய நஷ்ட ஈடு குறைப்பு..!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.890 கோடி நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ப்ரூக்ளின் பெண் மற்றும் அவரது கணவருக்கு 120 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டஈடு வழங்குமாறு நியூயார்க் மாநில நீதிபதி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். 

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்க் பவுடர், புற்று நோயை ஏற்படுத்தியதாக கிட்டத்தட்ட 22,000 வழக்குகளை எதிர்கொள்கிறது. 

இந்த நிலையில், அஸ்பெஸ்டாஸ் நிறுவனத்தின் டால்க் பவுடர் பயன்படுத்திய தங்களுக்கு புற்றுநோய் வந்துவிட்டதாக டோனா ஓல்சன்- ராபர்ட் ஓல்சன் தம்பதியனர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த வழக்கில் டோனா ஓல்சன் (67) மற்றும் ராபர்ட் ஓல்சன் (65) ஆகியோருக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 325 மில்லியன் டாலர்கள் வழங்குமாறு 2019 மே மாதம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

ஆனால், இதனை எதிர்த்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மேல்முறையீடு செய்ததை அடுத்து, மன்ஹாட்டனில் உள்ள மாநில உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஜெரால்ட் லெபோவிட்ஸ், 14 வாரமாக நடந்த விசாரணைக்கு பிறகு தற்போது 325 மில்லியன் டாலர்களில் இருந்து குறைத்து தீர்ப்பு வழங்கியுள்ளார். 

120 மில்லியன் டாலர்கள் அதாவது ரூ.890 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். 325 மில்லியன் டாலர்களில் இருந்து 120 மில்லியன் டாலர்களாக குறைக்கப்பட்டதாக புதன்கிழமை அன்று நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.

இதுகுறித்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கூறுகையில், "புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யாருக்கும் நாங்கள் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கிறோம். உண்மைகள் மிகவும் முக்கியம். எங்கள் டால்க் பவுடர் பாதுகாப்பானது. புற்றுநோயை ஏற்படுத்தாது என்று நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்