இண்ஸ்டன்ட் வைரம் உருவாக்க புதிய கண்டுபிடிப்பு…!

இண்ஸ்டன்ட் வைரம் உருவாக்க புதிய கண்டுபிடிப்பு…!

சர்வதேச விஞ்ஞானிகள் குழு வைரங்களை உருவாக்குவதை விரைவுபடுத்துவதற்கான வழியைக் கண்டறிந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இயற்கை வைரங்கள் பொதுவாக பில்லியன் கணக்கான ஆண்டுகள் கழித்தே உருவாகின்றன. இந்த மாதிரியான வைரங்கள் பூமியில் சுமார் 150 கிலோமீட்டர் ஆழத்தில், 1000 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிக அழுத்தங்களும், வெப்பநிலையும் உள்ள இடங்களில் மட்டுமே காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ANU மற்றும் RMIT பல்கலைக்கழகம் தலைமையிலான குழு இரண்டு வகையான வைரங்களை உருவாக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த வைரங்கள் அமெரிக்காவில் கனியன் டையப்லோ போன்ற விண்கல் தாக்கிய இடத்தில் இயற்கையில் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற வைரங்கள் ஆய்வகத்தில் அதிக வெப்பநிலையில் மட்டுமே உருவாகும் என கூறப்படுகிறது.

மேலும், புதிய எதிர்பாராத கண்டுபிடிப்புகள் சாதாரண அறை வெப்பநிலையில் அதிக அழுத்தங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உருவாகலாம் என ஆராய்ச்சியாளர்கள்  கூறுகின்றனர். உடனடி வைரங்களை உருவாக்கும் கண்டுபிடிப்பு மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.66%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.34%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்