இலங்கையில் பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் கடும் தண்டனை..!

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் கடும் தண்டனை..!

இலங்கையில், கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பவர்கள் அதிகமாக காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் 95 சதவீதம் பேர் ஏமாற்றுக்காரர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கத்துடன் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்பவர்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தலைவன் ஒருவனின் வழிகாட்டுதலின்படி பலர் பிச்சை எடுப்பதும், அவர்களுக்கு தினமும் சம்பளம் வழங்கப்படுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.


இதனால் போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்கள் மீதும், பிச்சை அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உண்மையாகவே தன் ஒரு நாள் தேவையை பூர்த்தி செய்ய இயல்லத ஏழ்மையான, பிச்சை எடுக்கும் நிலையில் தள்ளப்பட்ட நபர்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரி அஜித் ரோஹனா கூறியுள்ளார்.

யாசகம் செய்வதை கேவலமாக கருதிய காலம் போய் தொழிலாக மாறிய நவீன காலம் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    49.82%
  • ஓ. பன்னீர்செல்வம்
    50.18%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்