நான்காவது திருமணம் செய்ய மணப்பெண்ணை தேடும் 3 மனைவிகள்..!

கணவருக்கு நான்காவது திருமணம் செய்ய மணப்பெண்ணை தேடும் 3 மனைவிகள்..! பாகிஸ்தான் மக்கள் ஷாக்..!!

பாகிஸ்தான் மனிதருக்கு தற்போது இருக்கும் 3 மனைவிகள், நான்காவது திருமணம் செய்ய பெண் தேடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சியால்கோட் என்ற பகுதியில் அட்னான் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு வயது 22. இவருக்கு ஷோம்பல், ஷபானா, ஷாகிதா என மூன்று மனைவிகள் உள்ளனர். 

அட்னான், தனது 16 வயதில் திருமணம் செய்துகொண்டார். 3 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவது திருமணம் செய்துள்ளார். இவர் திருமணம் செய்துள்ள பெண்களின் பெயர்கள் S என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால், அதே எழுத்தில் பெயர் ஆரம்பிக்கும் நான்காவது பெண்ணை திருமணம் செய்ய அட்னான் விரும்புவதாக மனைவிகள் கூறியுள்ளனர். 

மூன்று பெண்களும் வீட்டு வேலைகளை தங்களுக்குள் பிரித்துள்ளனர். அவர்கள் சமையல், சலவை மற்றும் அட்னனின் உடமைகளை என தனித்தனியாக கவனித்து வருகின்றனர். 

இந்த நிலையில், அட்னான் கூறும்போது, ஆறு படுக்கை அறைகள் கொண்ட ஒரே வீட்டில் வசித்து வருகிறேன். தனது குடும்பத்துக்கு மாதத்துக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை செலவு செய்கிறேன். கணவரிடமிருந்து வந்த ஒரே புகார் என்னவென்றால், மனைவிகளுடன் போதுமான நேரத்தை செலவிடவில்லை என்று கூறுவார்கள். இருப்பினும், தனது மூன்று மனைவிகளும் தன்னை நேசிக்கிறார்கள் என்றும், தானும் அவர்களை மிகவும் நேசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்