விண்கல்... ஒரே நைட்டில் கோடீஸ்வரரான நபர்...!

விண்கல்... ஒரே நைட்டில் கோடீஸ்வரரான நபர்...!

வீட்டுக்குள் திடீரென விழுந்த விண்கல்லால் ஒருவர் கோடீஸ்வரராக மாறிய சம்பவம் இந்தோனேசியாவில் அரங்கேறியுள்ளது.

இந்தோனேசியாவில் விண்கல் ஒன்று திடீரென தகரத்தால் ஆன வீட்டின் மேற்கூரையை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்து விழுந்துள்ளது. சுமார் 2.1 கிலோ கிராம் எடை கொண்டது.

வீட்டிக்குள் விழுந்த விண்கல் சுமார் 15 சென்டி மீட்டர் ஆழம் வரை பாய்ந்து சென்றதாக தெரிகிறது. இதனால் அந்த வீடே சேதம் அடைந்துள்ளது. இது என்னவென்று அந்த குடும்பத்தினர் திகைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் அவர்களுக்கு புது விதமாக இருந்துள்ளது. 

இருப்பினும், அந்த குடும்பத்தினர் மகிழ்ச்சி அடையும் நிலைக்கு அந்த சம்பவம் மாறியுள்ளது. ஏனெனில், வீட்டுக்குள் திடீரென விழுந்தது விண்கல் என்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்த விண்கல் அரிதான வகையை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. இந்த விண்கல் மூலம் 33 வயது மதிக்கத்தக்க ஜோசுவா எனும் இந்தோனேசியர், ஒரே நாள் இரவிலேயே கோடீஸ்வரராக மாறியுள்ளார். 

இது தொடர்பாக ஜோசுவா கூறும்போது, சவப்பெட்டி செய்யும் தொழில் செய்யும் தனக்கு இந்த விண்கல் 30 வருட சம்பாத்தியத்தை கொடுத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  64.44%
 • இல்லை
  27.81%
 • யோசிக்கலாம்
  4.33%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.42%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்