டேட்டிங் ஆப் மூலம் நடந்த விபரீதம்... அமெரிக்க பெண் கதறல்..!

டேட்டிங் ஆப் மூலம் நடந்த விபரீதம்... அமெரிக்க பெண் கதறல்..!

டேட்டிங் ஆப் மூலம் சந்தித்த நபரால், அமெரிக்க இளம் பெண் ஒருவர் சந்தித்த தனது அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டுள்ளார். 

பெஞ்சமின் ஃபேன்ச்சர் என்ற நபரை, டேட்டிங் ஆப் மூலம் அமெரிக்க இளம் பெண் சந்தித்துள்ளார். ஆன்லைன் டேட்டிங்கின் உண்மையான ஆபத்துக்களை மற்ற பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான இந்த விழிப்புணர்வு பதிவை வெளியிடுகிறேன் என பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறியுள்ளார்.

டேட்டிங்குக்கு சென்றபோது, அந்த இரவு சாதாரணமாக இருந்தது. நாங்கள் இரவை கழித்துவிட்டு காரில் வந்துகொண்டிருந்தோம். அப்போது, நான் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் அவருடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, என்னை தலையிலும், முகத்திலும் சரமாறியாக தாக்க ஆரம்பித்தார். நான் காரை விட்டு வெளியேற முயன்றதால், அவர் என் தலைமுடியை பிடித்து இழுத்தார்.

நான் அதிகமாக அழுதேன். என்னை தற்காத்துக் கொள்ள முயற்சி செய்தேன். மேலும் என்னை விடுவிக்கும்படி அவரிடம் மன்றாடினேன். ஆனாலும் அவர் என்னை அடித்தார். துப்பாக்கியை காட்டி, அவர் என்னைக் கொல்லப்போவதாக கூறினார். எப்படியோ நான் அந்த காரில் இருந்து கீழே இறங்கி தெருவில் நடக்க ஆரம்பித்தேன். அதிக மக்கள் இருந்ததால் எனக்கு அந்த தெருவில் பாதுகாப்பு இருப்பதை உணர்ந்தேன்.

அந்த நேரத்தில் என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நான் உண்மையிலேயே நினைத்தேன். அவர் என்னை மீண்டும் காரிலிருந்து இழுத்துச் செல்ல முடிவு செய்தார். கடவுளின் கிருபையால் எனக்கு தெருவில் பாதுகாப்பு இருந்தது என இளம்பெண் தெரிவித்துள்ளார். 

தயவுசெய்து பெண்கள் விழிப்புடன் இருங்கள். இதுபோன்ற தவறான அனுபவங்களை இன்றைய தலைமுறையினர் சந்திக்காமல் இருப்பதே நல்லது என்பதற்கு இதுவே சான்று.

டேட்டிங்கு "அதிக விலை" என்று கூறி இளம்பெண்ணை தாக்கிய ஃபேன்ச்சர் என்ற நபரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  64.44%
 • இல்லை
  27.81%
 • யோசிக்கலாம்
  4.33%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.42%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்